1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:38 IST)

மாமல்லபுரத்தில் 10 அடியில் எழும் கடல் அலை: பொதுமக்கள் அச்சம்

sea waves
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மாமல்லபுரம் கடலில் அலைகள் கொந்தளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாமல்லபுரம் கடலில் சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதாகவும் அதை பார்ப்பதற்கு சுனாமி போல் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
இதனை அடுத்து மாமல்லபுரம் கடற்கரைக்கு இன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொதுமக்கள் முக்கிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று புயல் கரையை கடக்கும் வரை மாமல்லபுரம் கடற்கரையில் கடல் அலை மிக ஆக்ரோசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 
Edited by Siva