திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:37 IST)

வங்கக்கடலில் புயல்.. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு!

storm
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதன் பின்னர் புயலாக மாறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 
 
அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் கடலூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நாளை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva