ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:52 IST)

ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ள ஆலியா பட்… குழந்தை வளர்ப்பை மேற்கொள்ளும் ரன்பீர் கபூர்!

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஆலியா பட் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் இப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில், அவர் பிஸியாக இருக்கும் நிலையில் குழந்தையின் வளர்ப்பை தந்தையான ரன்பீர் கபூர் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.