பூமியை தாக்கிய சூரியனின் புவிகாந்த புயல்... இந்தியாவுக்கு பாதிப்பா?
சூரியனில் ஏற்பட்ட இரண்டு தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகள் காரணமாக, பூமியை நோக்கி அதிவேகமாக வந்தடைந்த சார்ஜ் செய்யப்பட்ட துகள்களால் மிதமான G2 வகை புவி காந்தப் புயல் பூமியை தாக்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இது குறித்த எச்சரிக்கையை விடுத்திருந்தது. சூரியனில் இருந்து வெளியான இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன் பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த G2 நிலை சூரிய புயலால் இந்தியாவுக்கு பெரிய அளவில் நேரடி பாதிப்பு எதுவும் ஏற்படாது என விஞ்ஞானிகள் அறிவிப்பு செய்துள்ளனர். இது போன்ற மிதமான புயல்களின் தாக்கங்கள் பொதுவாக அதிக அட்சரேகை கொண்ட நாடுகளில்தான் அதிகம் எதிரொலிக்கும்.
இருப்பினும், செயற்கைக்கோள்கள், ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளில் சிறிய அளவிலான தடங்கல்கள் அல்லது தொழில்நுட்ப மாற்றங்கள் தேவைப்படலாம். இந்தியாவில் உள்ள பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் மின்சார விநியோகத்தில் இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

