ரூ.400 கோடி டார்கெட் வச்சி வெளியிடப்பட்ட அரசாணை! - அடுத்தடுத்து அதிர்ச்சி
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். அப்போது தனியார் பள்ளிகளுக்கு உரிமம் கொடுப்பது, உரிமத்தை புதுப்பிப்பது ஆகியற்றுக்கு ரூ.400 கோடி வரை அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சமீபத்தில் மூன்று நாட்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. ஒரு பக்கம் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறி அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி வசூலிக்க டார்கெட் செய்து அரசாணை வெளியிட்டது தெரிய வந்திருக்கிறது..
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் 2023-க்காண திருத்தங்கள் கொண்டு வந்து வசூல் செய்துள்ளனர். 20 வருட தடை இல்லாத சான்று பெற தனியார் பள்ளியிடம் ரூ.40 லட்சம் முதல் ஒரு கோடி வரை வசூல் செய்திருக்கிறார்கள். மேலும், தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றிக் கொள்வதற்கும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. அன்பில் மகேஸ் வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன.