பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்
திமுக மூத்த தலைவர் மற்றும் பொருளாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும் பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த நவம்பர் 1ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணம் திராவிட இயக்க கொள்கைகளுக்கு மாறாக வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடைபெற்றது. இது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது..
பகுத்தறிவு பேசும் திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் தனது இல்ல திருமண விழாவை வைதீக முறைப்படி நடத்தலாமா என பலரும் கேள்வி எழுப்பினர். திமுக ஆதரவாளர் வீரபாண்டியன் மற்றும் தி.க தலைவர் வீரமணி ஆகியோரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள துரைமுருகன் எனது பேத்தியின் விருப்பப்படியே வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது. எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறையில் திருமணத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை விவாதம் ஆக்கவோ, அரசியலாக்கவோ வேண்டாம்.. திருமணம் நடைபெற்ற முறைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.