ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்... பயணர்கள்
சமீபகாலமாகவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒருபக்கம், ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இருந்த சில திட்டங்களையும் நீக்கியது. அதில் ரூ,299-க்கான ரீசார்ஜ் திட்டமும் ஒன்று. ரூ.299-க்கு அன்லிமிட்டேட் லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை 28 நாளுக்கு ஏர்டெல் வழங்கி வந்தது. ஆனால், அந்த திட்டம் தூக்கப்பட்டது.
இந்நிலையில், ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.649 திட்டங்களை ஏர்டெல் மீண்டும் கொண்டுவந்திருக்கிறது. எனவே, ரூ.299 ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

