பணத்தை எப்படி வாங்குனீங்க? யாருக்கெல்லாம் கொடுத்தீங்க? - அன்பில் மகேஷிடம் விடிய விடிய விசாரணை
கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது, அனுமதியை புதுப்பிப்பது ஆகியவற்றுக்கு கட்சி நிதி என்கிற பெயரில் பல நூறு கோடிகளை அவர் லஞ்சமாக பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவருக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகளிடம் எவ்வாறு பணம் வசூலிக்கப்பட்டது? பண பரிவர்த்தனை யார் மூலம் மேற்கொள்ளப்பட்டன? யாருக்கெல்லாம் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது? என சோதனைகளின் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று மதியம் முதல் விடிய விடிய அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இன்னும் இரண்டு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அவரிடம் பெறுகிற வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றவர்களிடமும் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் இரண்டு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அவரிடம் பெறுகிற வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றவர்களிடமும் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

