Asus ROG Xbox Ally கேமிங் சாதனம் ரிலீஸ்.. விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல்..!
கேமிங் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆசஸ் நிறுவனம், தனது புதிய 'Asus ROG Xbox Ally' கையடக்க கேமிங் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிசி கேமிங்கின் வலிமையை ஒரு சிறிய சாதனத்திற்குள் கொண்டு வந்துள்ள இந்த தயாரிப்பு, அதன் அசத்தலான திரை மற்றும் சிறப்பான செயல்திறனுக்காக பாராட்டுகளை பெற்று வருகிறது. பார்ப்பதற்கு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள இது, நீண்ட நேரம் விளையாடுவதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, இதில் AMD Ryzen™ Z2 A பிராசஸர் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட 7-இன்ச் ஃபுல் எச்டி திரை உள்ளது. இது மிக உயர்ந்த கிராபிக்ஸ் கொண்ட கேம்களை கூட தடையின்றி இயக்குகிறது.
இருப்பினும், இது விண்டோஸ் 11 இயங்குதளத்தில் செயல்படுவதால், ஒரு சாதாரண கேமிங் கன்சோலை போல எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. அடிக்கடி அப்டேட்கள் மற்றும் லாகின் சிக்கல்கள் இருப்பதால், அனுபவம் வாய்ந்த கேமர்களுக்கு மட்டுமே இது ஏற்றதாக இருக்கும்.
இதன் 80Wh பேட்டரி சுமார் 3 முதல் 3.5 மணிநேரம் வரை நீடிக்கிறது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.1,30,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரிமியம் சாதனம் என்பதால், கையடக்க வடிவில் கணினி வேகத்தை எதிர்பார்க்கும் தீவிர கேமர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
Edited by Siva