1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Instagram New Update: Users Can Now Edit Posts After Uploading

இன்ஸ்டாகிராமின் அதிரடி மாற்றம்: போஸ்ட் பதிவிட்ட பிறகும் மாற்றி கொள்ளலாம்!

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ பதிவேற்றம் செய்த பிறகு, அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்த பதிவை நீக்கிவிட்டு மீண்டும் பதிவேற்ற வேண்டிய சூழல் இருந்தது.
 
ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம், ஒரு போஸ்ட்டை பதிவு செய்த பின்னரும் அதில் உள்ள பிரிவுகள் அல்லது சில அம்சங்களை மாற்றியமைக்கும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 
 
பல்வேறு சமூக வலைதளங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய வசதிகளை வழங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமின் profile gridல் உள்ள post previewக்க்களை மாற்றி கொள்ளலாம் என்ற வசதி, பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
தவறுகளைத் திருத்தவும், பதிவுகளை புதுப்பிக்கவும் இது ஒரு நல்ல முடிவாக கருதப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுகவில் ஓபிஎஸ் இணைய இந்த ஒரே ஒரு காரணம் தான்: சசிகலா அதிரடி குற்றச்சாட்டு!