வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 மார்ச் 2026 (12:50 IST)

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?

ஒரே நாளில் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடியில் இருந்து திடீரென வெளியேற்றம்.. என்ன காரணம்?
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுடன் ஓபன்ஏஐ  நிறுவனம் ரகசிய ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, சுமார் 25 லட்சம் பயனர்கள் சாட்ஜிபிடி சேவையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க தற்காப்பு துறை தனது ரகசிய நெட்வொர்க்குகளில் இந்த ஏஐ மாதிரியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பயனர்கள், சாட்ஜிபிடி செயலியை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த செயலியின் 'அன்இன்ஸ்டால்' விகிதம் 295 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்துள்ளது. பென்டகன் ஒப்பந்தம் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் இன்னும் தெளிவான தகவல் தொடர்பு தேவை என்றும் ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
பயனர்களின் நம்பிக்கை குறைந்து வருவது ஓபன்ஏஐ  நிறுவனத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
 
Edited by Siva