1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin hope that dmk will in all the areas

விஜய் ஃபேன்ஸ் திருந்துவாங்க!.. பொசுக்கு இப்படி சொல்லிட்டாரே மு.க.ஸ்டாலின்...

stalin vijay
கடந்த பல வருடங்களாகவே தமிழக அரசியல் களம் அதிமுக, திமுக இடையேயான போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதிதாக விஜய் வந்திருக்கிறார். அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்று கட்சியை விரும்புபவர்கள் பலரும் விஜயை ஆதரிக்க துவங்கியிருக்கிறார்கள்.

ஒருபக்கம் வருகிற 23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் விஜய் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல ஊர்களுக்கும் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்..

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் முக ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.. அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள்.. ‘நடிகர்களின் பின்னால் இளைஞர்கள் சென்று கீழே விழுந்து விபத்தை சந்திக்கிறார்கள்.. அவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என ட்டதற்கு ‘மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. விரைவில் திருந்துவார்கள்’ என்று கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து அடிமையாக மாறிவிட்டார்.. அதை பார்க்கும்போது வெட்கமாகவும், அவமானமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.. புதுக்கோட்டையில் மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவை பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என எனக்கு தோன்றுகிறது  என கூறினார்.. மேலும், நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் அதுபற்றி கவலைப்படவில்லை.. நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என ஸ்டாலின் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
Asus ROG Xbox Ally கேமிங் சாதனம் ரிலீஸ்.. விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல்..!