1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. austrlia specialist invented super fast charger

கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ்!. பேட்டரி உலகில் புதிய புரட்சி!...

battery
மொபைல் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் சாதங்கள் பேட்டரியின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.. இப்போதெல்லாம் பேட்டரி பைக் மற்றும் கார்கள் கூடவந்துட்டது. செல்போன் பயன்பாட்டில் பேட்டரி முக்கிய பங்கு வகிக்கிறது. செல்போன் உற்பத்தியில் பல வசதிகளும் முன்னேற்றங்களும் வந்துவிட்டாலும் இன்னும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் பேட்டரி அடிப்படையில்தான் செயல்படுகிறது.

அதிலும் செல்போன் வாங்கிய புதிதில் பேட்டரி அதிக நேரம் நீடித்தாலும் சில வருடங்களில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிடுகிறது. அல்லது சார்ஜ் ஏறுவதற்கும் அதிக காலதாமதம் ஆகிறது.. இந்த நிலையில் தான் கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் குவாண்டம் பேட்டரியின் முதல் மாதிரி வடிவத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள்.

குவாண்டம் இயற்பியலின் நுணுக்கமான Superposition, Entanglement  தத்துவங்கள் அடிப்படையில் இயங்கும் இந்த பேட்டரி தனது ஆற்றலை விளக்கும் வேகத்தை விட ஒரு மில்லியன் மடங்கு அதிக வேகத்தில் சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது ஒரு சோதனை முயற்சியாக மிக குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே சேமிக்கும் நிலையில் இருக்கிறது. இது வெற்றியடைந்தால் மின்சாரத்தை நொடிப்பொழுதில் சேமித்து வைக்க பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
About Writer
Mahindran
அடுத்த கட்டுரையில்
லெபனான் குடியிருப்பு பகுதியை தாக்கிய இஸ்ரேல்!.. வீடுகள் தரைமட்டம்!. பலரும் பலி!..