1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva

இஸ்ரேல் பிரதமரின் காபி குடிக்கும் வீடியோ டீப்ஃபேக் வீடியோவா? Grok கிளப்பிய சர்ச்சை..!

இஸ்ரேல் பிரதமரின் காபி குடிக்கும் வீடியோ டீப்ஃபேக் வீடியோவா? Grok கிளப்பிய சர்ச்சை..!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த வாரம் வெளியான ஒரு வீடியோவில் நெதன்யாகுவிற்கு ஆறு விரல்கள் இருப்பது போல தெரிந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும் தற்போது நடப்பவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். 
 
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு, "நான் காபிக்காகத்தான் ஏங்குகிறேன்  என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
 
இருப்பினும், இந்த வீடியோவையும் 'எக்ஸ்' தளத்தின் ஏஐ சாட்போட்டான Grok, இது ஒரு டீப்ஃபேக் வீடியோ என்று முத்திரை குத்தியுள்ளது. வீடியோவில் காபி கோப்பை புவிஈர்ப்பு விசைக்கு மாறாக இருப்பது, நெதன்யாகுவின் முக அமைப்பு மாறுவது போன்ற நுணுக்கமான விஷயங்களை சுட்டிக்காட்டி இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என பலரும் வாதிடுகின்றனர். 
 
ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இந்த தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளது. அதேபோல், அவர் சென்ற 'தி சாடாப்' காபி உணவகமும் அவர் அங்கு வந்த புகைப்படங்களை வெளியிட்டு உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
 
Edited by Siva