1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Apple Offers Up to Rs 81,500 Discount on Foldable iPhone Duo via Trade-In Program

இந்தியாவில் ஆப்பிள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஐபோன் டூயோ.. ரூ.81,500 வரை தள்ளுபடி.. எப்படி வாங்குவது?

ஆப்பிள் ஐபோன் டூயோ
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிப்பு ரக ஸ்மார்ட்போனான 'ஐபோன் டூயோ'  இந்தியாவில் ரூ. 2,99,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலையைக் கண்டு தயங்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது பழைய போன்களை மாற்றிக் கொள்ளும் ‘ட்ரேட்-இன்’ திட்டத்தின் கீழ் ரூ. 81,500 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது.
 
இந்த சலுகையின் கீழ் பழைய ஐபோன் 16 பிளஸ் மாடலுக்கு ரூ. 40,000 வரையிலும், ஐபோன் 17 மாடலுக்கு ரூ. 45,000 வரையிலும், ஐபோன் 17 புரோ மேக்ஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 71,000 வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், இந்த எக்ஸ்சேஞ்ச் தொகையானது வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பழைய போனின் உதிரிபாகங்களின் இயக்கம் மற்றும் திரையின் நிலையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். சில ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை பொருந்தும்.
 
7.6 இன்ச் மடிக்கக்கூடிய திரையுடன் வெளிவந்துள்ள இந்த ஐபோன் டூயோவிற்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், வாடிக்கையாளர்களின் அசுர வரவேற்பு மற்றும் தேவையின் காரணமாக இதன் டெலிவரி தேதிகள் 2027 ஜனவரி மாதத்திற்குத் தள்ளிப்போயுள்ளன. எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் போன் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லாரும் அவர் பின்னாடி போறீங்க!.. வயிறு எரியுது!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!...