1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rs bharathi says youngsters going with vijay

எல்லாரும் அவர் பின்னாடி போறீங்க!.. வயிறு எரியுது!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!...

rs bharathi
2026 சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயும் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார். இதை திமுகவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும், திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோற்றுப்போனது அக்கட்சியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

விஜய் அடிப்படையில் ஒரு நடிகராக இருந்ததால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரிடம் அன்பு காட்டுகிறார்கள். அதையே அவர் வாக்குகளாகவும் மாற்றிவிட்டார். இளைஞர் கூட்டத்தை தன்னுடன் வைத்திருக்கும் விஜயை எப்படி காலி செய்வது என தெரியாமல் திமுக திக்குமுக்காடி வருகிறது. விஜயும் ஒருபக்கம் ‘திமுக ஒரு தீய சக்தி’ என பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில்தான், தொடர்ந்து தவெகவையும், முதல்வர் விஜயையும் விமர்சித்து வரும் திமுக அமைப்புச் செயலாளர் நேற்று திமுக நிகழ்ச்சியில் பேசியபோது ‘திமுகவை அழித்துவிடுவேன் என ஒருவர் சொல்லி வருகிறார்.. அவரின் பின்னால் இளைஞர்களெல்லாம் போகிறார்கள். அதைப்பார்க்கும்போது எங்கள் வயிறு எரிகிறது.. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை வளர்த்திருப்போம்’ என பேசினார்.  
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி மற்றும் நட்பு நாடு.. மார்கோ ரூபியோ