1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annai Seer Scheme, Tamil Nadu Government, CM Joseph Vijay, Social Welfare, Women Rights

விஜய் அரசின் அண்ணன் சீர் திட்டம்.. திருமணத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.. முழு விவரங்கள்...

அண்ணன் சீர் திட்டம்
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களின் திருமணங்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு 'அண்ணன் சீர்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மணமக்களின் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
 
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அக்டோபர் 5, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரை திருமணம் நடைபெறும் தம்பதிகள் ஜனவரி 15, 2027 வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரான மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மற்றும் ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
 
அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வழியேயோ எளிதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு அதன் நிலை குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி, மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் முதல்வர் விஜய்யின் இந்தச் சீர்மிகு திட்டம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..