சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா!.. ராகுல் போனை எடுக்காத முக ஸ்டாலின்!..
காங்கிரஸ் முன்னால் தலைவர் மற்றும் ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி எழுதிய புத்தகத்தின் வெளியிட்டு விழா சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அதில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் முக ஸ்டாலின் அதில் கலந்துகொள்ளவில்லை.
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்க ராகுல் அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை மு.க ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளில் பிஸியாக இருப்பதாக கூறி ராகுல் காந்தியுடன் பேசுவதை முக ஸ்டாலின் தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது..
கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தவெகவுக்கு ஆதரவு தேவைப்பட்டபோது ஒரே நாளில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததோடு அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம் பிடித்து விட்டது.
மேலும், சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீடு பிரச்சனையின் போது முக ஸ்டாலின் தொலைபேசி அழைப்பை ராகுல் ஏற்க மறுத்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அந்த கோபத்தில்தான் ராகுலிடம் பேச முக ஸ்டாலின் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.