தடம் பதிக்குமா சென்னை? தடை போடுமா ராஜஸ்தான்?: புனேவில் இன்று பலப்பரீட்சை

c
Last Modified வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:02 IST)
புனேவில் உள்ள மகாராஷ்டரா மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதுகின்றன.

 
 
ஐபிஎல் போட்டியின் 17-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது
.
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :