இவர்தான் அதுக்கு காரணம்; ஆனால் அவரிடம் இதை நான் கூறவில்லை - கோஹ்லி

Kohli
Last Updated: வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:02 IST)
தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி சாதனை படைக்க டிவில்லியர்ஸ்தான் காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

 
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா மண்ணில் சாதனை படைத்தது.
 
இந்த சாதனைக்கு யார் காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
டெஸ்ட் தொடரின் போது தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸிடம் இருந்து சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அதை அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படுத்தினேன். அது நன்றாக வேலை செய்தது. நான் என்ன நுணுக்கம் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்பதை இதுவரை அவரிடம் நான் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :