கிறிஸ் கெய்லே அதிரடி சதம்: ஐதராபாத் அணிக்கு 194 இலக்கு

Last Updated: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (04:18 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியாக சதமடித்ததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 18 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வானவேடிக்கை நடத்தினார். அவர் இன்று 11 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் 104 ரன்களை குவித்தார். இதனால் இந்த அணியின் ஸ்கோர் 193 என்ற நிலையில் உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் சன் ரைசர்ஸ் அணி 194 என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர் வெற்றியை ஐதராபாத் அணிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :