ஐதராபாத் அணிக்கு முதல் தோல்வியை கொடுத்த தமிழன் அஸ்வின்

Last Modified வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (04:19 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் தமிழர் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி, தொடர் வெற்றி பெற்று கொண்டிருந்த ஐதராபாத் அணியை தோற்கடித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, கிறிஸ் கெயிலின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 54 ரன்களும், பாண்டே 57 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் அபார சதமடித்த கிறிஸ் கெயில் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இந்த நிலையில் இன்று சென்னை அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :