வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (08:50 IST)

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?
நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது, கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, தொடக்க வீரர் நிசாங்காவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 18 ஓவர்களிலேயே 184 ரன்கள் குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
 
இந்தத்தோல்வியால் ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஜிம்பாப்வே 2 போட்டிகளில் வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
 
வரும் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே வெற்றி பெற்றால், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறும் இக்கட்டான நிலை உருவாகும். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
 
Edited by Siva