1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:01 IST)

ஹர்பஜனின் வேற லெவல் தமிழ் ட்விட்: இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு...

காவிரி பிரச்சனை காரணமாக தமிழகத்தில் பிரச்சனை நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என முடிவு செய்யப்பட்டு பூனேவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் புனேவில் நாளை ராஜஸ்தானிற்கும் சென்னைக்கும் இடையில் போட்டி நடக்க உள்ளது. இதை பார்க்க சென்னையில் இருந்து ரசிகர்கள் செல்கிறார்கள். 
 
சென்னை ரசிகர்கள் புனே செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. எனவே, பூனே வரும் சென்னை ரசிகர்களை வரவேற்கு விதமாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் ட்விட் செய்துள்ளார்.
 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று டிவிட் செய்துள்ளார்.