1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ramayana movie collected more than 1200 crores

ரூ.1200 கோடியை தாண்டிய கலெக்சன்!.. ராமாயணா 10 நாள் வசூல் அப்டேட்...

ramayana
ரன்பீர் கபூர் ராமனாகவும், கேஜிஎப் பட புகழ் யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த 5ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் ராமாயணா. இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது.

படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது, அதோடு இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதால் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்று படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டநிலையில் ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1228 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.820 கோடி வசூல் செய்துள்ளதாம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரஜினியிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.. ஜெயிலர் 2 குறித்து பாலிவுட் நடிகை...