14,800 கோடி வசூல்!.. உலக அளவில் சாதனை செய்த The Odyssey
கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இவரின் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. நோலனின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு, டீசர், டிரெய்லர் என எது வந்தாலும் அவரின் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.
அதேபோல், படம் தியேட்டரில் வெளியாகும் போது அந்த படத்தை சிலாகித்து பலரும் டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரைட்டப் எழுதுவதுண்டு. சினிமா துறைக்கு வரும் நினைப்பவர்கள் கிறிஸ்டோபர் நோலனின் படங்களை பார்த்தால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என பலரும் சொல்வதுண்டு. இவர் இயக்கிய இண்டெர்செல்லர், இன்செப்ஷன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது..
கிரேக்க நாவலான Odyssey-ஐ அடிப்படையாக வைத்து நோலன் இயக்கிய இந்த The Odyssey திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தில் இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதேபோல் ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளியானது..
இந்நிலையில், The Odyssey திரைப்படம் உலக அளவில் 1.5 பில்லியன் டாலரை வசூல் செய்திருக்கிறது. இந்திய மதிப்பில் 14 ஆயிரத்து 800 கோடி வசூலை கடந்து சாதனை படைத்திருக்கிறது. The Avengers, Avatar: Fire and Ash படங்களின் வசூலை முந்தி உலக அளவில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 14வது இடத்தை The Odyssey பிடித்திருக்கிறது.