1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. the odyssey movie collected hundred crores india

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய The Odyssey!.. உலகம் முழுவதும் வசூல் என்ன?..

odyssey
ஹாலிவுட்டில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். வித்தியாசமான கதைகளை கையிலெடுத்து அதில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பவர் இவர். இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய இன்செப்ஷன், இன்ஸ்டர்செல்லர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்தான் கிரேக்க காப்பியமான ஒடிசி நாவலை அடிப்படையாக வைத்து இவர் இயக்கிய தி ஒடிசி திரைப்படம் கடந்த 17ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவில் இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது..

இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதேபோல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.3206 கோடி வசூல் செய்திருக்கிறது. கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தை ஐ மேக்ஸ் 70mm கேமராவில் எடுத்திருந்தார். அதை முழுமையாக உணர உலகத்தில் 41 தியேட்டர்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவில் Imax 70mm தியேட்டர்கள் இல்லை. ஆனாலும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தை கண்டு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பேமெண்ட் கொடுக்காமல் ஒடிசி படத்தை ரிலீஸ் செய்துட்டாங்க... கிறிஸ்டோபர் நோலன் மீது குற்றச்சாட்டு...