1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. the odyssey movie collection for four days

4 நாட்களில் 2700 கோடி வசூல்!.. வசூலை வாரிக்குவிக்கும் தி ஒடிசி!...

odyssey
கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய காப்பியமான Odyssey நாவாலை தழுவி ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருகும் திரைப்படம் The Odyssey. இந்த திரைப்படம் கடந்த 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு..

எனவே அவருடைய ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒடிசி படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியானது முதலே இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒடிசி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.2700 கோடி வசூல் செய்து சாதனைப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் நான்கு நாட்களில் இந்த திரைப்படம் ரூ.70 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
Jailer 2: ஆடியோ லான்ச் மலேசியாவில் வேணாம்!.. ஆர்வம் காட்டாத ரஜினி!..