1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. the odyssey movie collection update

வசூலில் சாதனை!.. 6 ஆயிரம் கோடி வசூலை தாண்டிய The Odyssey!..

odyssey
கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் இயக்கத்தில் வெளியான இண்ட்ரஸ்டெல்லர், இன்செப்ஷன் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தான் கிரேக்க காப்பியமான ஒடிசி என்கிற நாவலை அடிப்படையாக நோலன் இயக்கிய The Odyssey திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

கிறிஸ்டோபர் நோலன் ஒடிசி திரைப்படத்தை Imax 70 mm கேமராவில் எடுத்திருப்பதால் இந்த படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரம் அதை முழுமையாக உணர அதற்கான தியேட்டர்கள் இந்தியாவில் இல்லை. உலகம் முழுவதும் 41 திரையரங்கில் மட்டுமே ஐமேக்ஸ் 70mm வசதிகள் இருக்கிறது.

ஆனாலும் இந்த படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் ஒடிசி திரைப்படம் உலக அளவில் ரூ.6170 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் இந்த திரைப்படம் 140 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த படம் இந்தியா முழுவதும் வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் 8,413 திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
30 நாட்களில் 3 திரைப்படங்கள் ரிலீஸ்!.. முக்கிய நடிகையாக மாறிய மமிதா பைஜூ!..