1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. sathyaraj 230rd film title as weapon

சத்யராஜின் 230வது படம்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

weapon
சத்யராஜின் 230வது படம்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!
நடிகர் சத்யராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 230வது படத்தின் மாஸ் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
சத்யராஜ் மற்றும் இளம் நாயகன் வசந்த் ரவி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு வெப்பன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின்  போஸ்டரை சத்யராஜின் பிறந்த நாளையொட்டி இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
சவாரி என்ற படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி சேனல்!