1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. nagarjuna drinking water is too costly

நாகார்ஜுனா குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் எவ்ளோ தெரியுமா?!.. அடேங்கப்பா!..

nagarjuna
35 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்து வருபவர் நாகார்ஜுனா. தாய் மொழி தெலுங்கில் பல படங்களில் நடித்தாலும் சில நேரடி தமிழ் படங்களிலும் நாகார்ஜுனன் நடித்திருக்கிறார். நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார்.

ஒருபக்கம் மகன் நடித்துவந்தாலும் இப்போதும் நாகார்ஜுனா பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில்  ஹீரோவாகவும் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவிடம் எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கும் விஷயம் அவரிடம் இருக்கும் இளமைதான். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் அவர் தோற்றத்தை பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள்.

water

இந்நிலையில்தான், நாகார்ஜுனா பற்றிய ஒரு தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் நாகார்ஜுனா குடிக்கும் தண்ணீர் பாட்டில் தொடர்பான புகைப்படங்களை சிலர் பகிர்ந்து அது சாதாரண தண்ணீர் அல்ல.. அதன் பெயர் டானிக் வாட்டர்.. அந்த தண்ணீர் ஒரு லிட்டர் விலை ரூ.500 என பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இதனால்தான் அவர் 66 வயதிலும் பிட்டாக இருக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
சூர்யா மகன் தேவ் இவ்ளோ பெரிசா வளர்ந்துட்டாரே!.. வைரலாகும் வீடியோ!...