1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. National Award-Winning Tamil Director and Cinematographer Chezhiyan Passes Away

தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் மறைவு.. சோகத்தில் தமிழ் சினிமா...

செழியன்
தமிழ் திரையுலகிற்கு இது மிகுந்த சோகமான காலகட்டமாக மாறியுள்ளது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, கல்லூரி உள்ளிட்ட பல தரமான படங்களில் தனது நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் தனி முத்திரை பதித்தவர் செழியன். ஒளிப்பதிவாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னாளில் 'டூலெட்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். யதார்த்தமான வாழ்வியலைப் பிரதிபலித்த அந்தப் படத்திற்காக அவருக்குப் பல உயரிய விருதுகளும், தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான செழியனின் இழப்பு, கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெருஞ்சேதமாகும். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒளிப்பதிவாளர் செழியர் மரணம்!.. திரையுலகினர் அதிர்ச்சி..