தொழிலதிபர் மகளுடன் திருமணம்?!.. 200 கோடி மதிப்புள்ள பங்களாவை கட்டும் பிரபாஸ்!...
தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் பிரபாஸ். ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் அவரை பேன் இண்டியா அளவில் பிரபலமடைய வைத்தது. அதன்பின் வந்த பாகுபலி 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழியிலும் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படம் 1500 கோடி வரை வசூல் செய்ததாக அப்போது சொல்லப்பட்டது.
எனவே, அந்த படத்திற்கு பின் பிரபாஸ் பேன் இண்டியா நடிகராக மாறினார். அவரின் சம்பளமும் 150 கோடி வரை உயர்ந்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் சாஹோ, சலார், ஆதிபுருஷ், கல்கி, ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல படங்களிலும் பிரபாஸ் நடித்தார். ஒருபக்கம், 46 வயதாகியும் இன்னமும் பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நடிகை அனுஷ்காவோடு இவர் கிசுகிசுக்கப்பட்டாலும் அதில் உண்மையில்லை என இருவருமே சொல்லிவிட்டனர்.
இந்நிலையில்தான், அடுத்த வருடம் ஒரு தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்யவிருப்பதாகவும், வருங்கால மனைவிக்காக ஹைதராபாத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர பங்களாவை அவர் கட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.