திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:28 IST)

ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி சேனல்!

munishraja
ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி சேனல்!
ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி சேனல்!
ராஜ்கிரண் மகளுக்கு திருமணம் செய்து வைத்த டிவி சேனல்!
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் சமீபத்தில் சீரியல் நடிகர் முனிஷ்ராஜ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது டிவி சேனல் ஒன்று ஊரறிய உலகறிய திருமணம் செய்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரபல நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகளுக்கும் சீரியல் நடிகர் முனிஷ்ராஜ் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் ரகசியமாக திருமணம் நடந்தது.
 
இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜ்கிரன் முனிஷ்ராஜ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்
 
இந்த நிலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முனிஷ்ராஜ்க்கும் அவரது மனைவிக்கும் டிவி குழுவினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்த புர்மோ வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva