திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (18:22 IST)

வெண்ணிற ஆடைமூர்த்தியின் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் வாரிசு!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தி ரசிகர்களைக் கவர்ந்தவர்.

1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானவர் மூர்த்தி. இப்படத்தில்தான் ஜெயலலிதா மற்றும் நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். எனவே இப்படத்தின் தலைப்பு மூர்த்திக்கும், நிர்மலாவுக்கும் நிலைத்துப் போனது. குணசித்திர வேடத்தில் நடித்து வந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் காமெடிக்கு தாவினார். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட மூர்த்தி ரசிகர்களை கவர்ந்தார். ’ஏண்டா மூதேவி. நீ திருந்தவே மாட்டியா?” என்கிற இவரின் புகைப்படத்தோடு கூடிய வாசகம் இப்போதும் முகநூலில் புகைப்பட கமெண்டாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்படு வருகிறது.

இப்போது அவர் சினிமாவில் இருந்து ஓய்வில் இருக்கும் நிலையில் அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு கலைத்துறைக்கு வர இருக்கிறார். அவரின் பேரன் விரைவில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளாராம்.