1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. suriya son dev speaking video goes viral

சூர்யா மகன் தேவ் இவ்ளோ பெரிசா வளர்ந்துட்டாரே!.. வைரலாகும் வீடியோ!...

dev suriya
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு தேவ் என்கிற மகனும் தியா என்கிற மகளும் இருக்கிறார்கள். பல வருடங்களாகவே சென்னையில் வசித்து வந்த சூர்யாவின் குடும்பம் கடந்த சில வருடங்களாகவே மும்பையில் செட்டில் ஆகிவிட்டது.

அதில் மகன் மும்பையிலும் மகள் வெளிநாட்லும் படித்து வருவதாக செய்திகள் வெளியானது. மகன் தேவ் அனில் அம்பானி நடத்தும் ஒரு பள்ளி ஒன்றில் AI தொடர்பான படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் மகன் தேவ் தனது படிப்பை பற்றியும் தான் செய்து வரும் பிராஜெக்ட் பற்றியும் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.

அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் தேவ் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா என ஆச்சரியப்படுகிறார்கள்.. அதோடு தேவ் சரளமாகவும், ஆங்கிலத்தில் தைரியமாக பேசும் ஸ்டைலை பார்த்து ‘அப்பாவின் ரத்தம் அப்படியே இருக்கிறது’ என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.


அடுத்த கட்டுரையில்
தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் மறைவு.. சோகத்தில் தமிழ் சினிமா...