1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (11:04 IST)

இன்று ஒரே நாளில் பெரியார், மோடி பிறந்த நாள்: இருவருக்கும் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

modi periyar
இன்று ஒரே நாளில் பெரியார், மோடி பிறந்த நாள்: இருவருக்கும் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!
இன்று ஒரே நாளில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இருவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்
 
பெரியார் பிறந்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!
 
பிரதமர் மோடி பிறந்த நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் நீண்ட காலம் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் முதலாளி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.