1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. idhyam murali movie getting positive review

இதயம் முரளிக்கு பாசிட்டிவ் ரிவ்யூ!.. அதர்வாவுக்கு ஒரு ஹிட் பார்சல்!...

idhyam murali
அதர்வா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இதயம் முரளி படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல ஃபீல் குட் ரொமாண்டிக் காமெடி படமாக இதய முரளி வெளிவந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கலர் ஃபுல்லான பொழுதுபோக்கு பீல் குட் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

படத்தில் வரும் காதல் மற்றும் காமெடி காட்சிகள் ரசிக்க வைப்பதாகவும், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் ஆகியோர் ஸ்கோர் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

படம் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கிறது.. வெளிநாட்டில் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.. 20 நிமிடங்கள் வரும் கிளைமாக்ஸ் காட்சி படத்திற்கு பெரிய பலம்.. என விமர்சகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படி, பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் அதர்வாவுக்கு இதயம் முரளி திரைப்படம் ஒரு ஹிட் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தொழிலதிபர் மகளுடன் திருமணம்?!.. 200 கோடி மதிப்புள்ள பங்களாவை கட்டும் பிரபாஸ்!...