வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:37 IST)

நயன்தாராவுடன் 8வது பிறந்த நாள்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

Vignesh
நயன்தாராவுடன் எட்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடினார். துபாயில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியபோது, ‘ நயன்தாரா உடன் எட்டாவது முறையாக நான் பிறந்த நாள் கொண்டாடுகிறேன் என்றும் அவருடன் பிறந்த நாள் கொண்டாடுவதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது நயன்தாராவுக்கு நன்றாக தெரியும் என்றும் அவருக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.