1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. avengers doomday collected 100 million in advance

அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.950 கோடி வசூல்!.. Avengers: Doomday வேறலெவல்!..

avengers
உலகெங்கும் ஹாலிவுட் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனாலேயே அதிக பொருட்செலவில் அந்த படங்களை மார்வெல் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு வெளியான Spiderman brand new day இந்தியாவில் மட்டும் 500 கோடி வசூல் செய்தது. உலக அளவில் 2 பில்லியன் டாலரை தாண்டி வசூல் செய்தது. அதேபோல், கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி திரைப்படம் 1.29 பில்லியன் டாலர் வசூல் செய்தது. இந்தியாவில் இப்படம் 214 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில், இந்த வரிசையில் அடுத்து Avengers: Doomday வருகிற டிசம்பர் 18ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. பட ரிலீசுக்கு 4 மாதங்கள் இருக்கும் நிலையில் அட்வான்ஸ் புக்கிங்கில் 100 மில்லியன் டாலரை வசூலித்து சாதனை செய்திருக்கிறது. உலகளவில் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 950 கோடி) வசூலை எளிதாக இப்படம் எட்டும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.  
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
சூர்யாவுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்!.. 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் வசூல் அப்டேட்!...