தொடர்புடைய செய்திகள்
- விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...
- ஒரே மேடையில் லிசா - பிரியங்கா சோப்ரா.. கிழக்கத்திய அழகும் மேற்கத்திய கம்பீரமும்..!
- கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?
- டைட்டில் அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?... ஆச்சர்யப்படுத்தும் ‘வாரனாசி’ படக்குழு!
- வாரனாசி படத்தில் மகேஷ் பாபுவை விட ராஜமௌலிக்கு சம்பளம் அதிகமா?
ரூ.95,000 மதிப்புள்ள காலணிகளை உதைத்தார் பிரியங்கா சோப்ரா: பிரபல ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு!
ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2015-ம் ஆண்டு வெளியான 'குவாண்டிகோ' என்ற அமெரிக்க தொடரில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்றார். இந்நிலையில், அந்த தொடரின் படப்பிடிப்பின் போது பிரியங்கா சோப்ரா ஆடைகள் மற்றும் உடமைகளை மரியாதை குறைவாக கையாண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேரி டாபன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய கேரி டாபன், மாண்ட்ரியல் நகரில் நடந்த 'குவாண்டிகோ' படப்பிடிப்பின் போது பிரியங்காவிற்கு ஆடை வடிவமைப்பு செய்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். "பிரியங்கா சோப்ரா என்னிடம் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் பழகினார். ஆனால், ஆடைகளுக்கான 'ஃபிட்டிங்' சோதனைகளின் போது அவர் ஆடைகளை மிகவும் முரட்டுத்தனமாக கையாண்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அத்தொடருக்காக பயன்படுத்தப்பட்ட உடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த சொகுசு பிராண்டுகளிடமிருந்து பெறப்பட்டவை. ஒருமுறை, சுமார் ரூ.95,000 மதிப்புள்ள 'ஜிவஞ்சி' பிராண்ட் காலணி ஒன்றை பிரியங்கா சோப்ரா அலட்சியமாக உதைத்து தள்ளினார். ஆடைகளை மதிப்பது முக்கியம் என்பதால் அவரது இந்த செயல் எனக்கு வருத்தமளித்தது," என்றார். இருப்பினும், தொழில்முறை ரீதியாக பிரியங்கா சோப்ரா தமக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva
