1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. the odessy movie advance booking is open

2500 முதல் 3000 ஆயிரம் வரை!.. The Odessy அட்வான்ஸ் புக்கிங் ஃபுல் ஆயிடுச்சே!....

odessy
ஹாலிவுட்டில் முக்கிய இயக்குனராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் நிறைய படங்களின் இடம் பெற்ற காட்சிகளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் பல இயக்குனர்கள் காப்பியடித்து இங்கு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். ஏ.,ஆர் முருகதாஸ் எடுத்த கஜினி படம் கூட கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Momento என்கிற படத்திலிருந்து சுட்டதுதான்.
 
The Dark knight, Interseller, Inception, Tenet போன்ற திரைப்படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இப்போது The Odessy என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிரியிருக்கிறது. ஏனெனில் உலகமெங்கும் கிறிஸ்டோபர் நோலனுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த The Odessy திரைப்படம் வருகிற 17-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
 
இதையடுத்து அட்வான்ஸ் புக்கிங் இந்தியாவில் துவங்கியிருக்கிறது. மும்பை ஐமேக்ஸ் திரையரங்குகளில் வார இறுதி நாட்களுக்கான ஒரு டிக்கெட் 2500 முதல் 3000 வரை விற்க்கப்படுகிறது. இந்தியாவில் நோலன் படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச டிக்கெட் விலை இதுதான் என சொல்லப்படுகிறது. அதேநேரம் அதிக கட்டணம் இருந்தாலும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ஐமேக்ஸ் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அஜித் போடும் கண்டிஷன்!.. தெறிச்சி ஓடும் புரடியூசர்ஸ்!.. புது படத்துக்கு சிக்கல்!..