1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Major Relief for TNEB Employees with New Retirement

ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது ... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...

மின்வாரியம்
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை பணியின்போது ஒழுங்கு நடவடிக்கை அல்லது கிரிமினல் வழக்குகள் உள்ள ஊழியர்களை அவர்கள் ஓய்வுபெறும் கடைசி நாளன்று சஸ்பெண்ட் செய்து, அவர்களது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை முழுமையாக நிறுத்தி வைக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. 
 
இதனால் ஊழியர்கள் நீதிமன்றங்களை நாடும் அவல நிலை ஏற்பட்டது. தற்போது தமிழக அரசின் விதித்திருத்தத்தை தொடர்ந்து, தமிழ்நாடு மின்வாரிய சேவை விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தின்படி, எந்தவொரு ஊழியரையும் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என்றும், அனைவரையும் முறையாக ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும் என்றும் மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் மூலம் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளைத் தவிர்த்து, சாதாரண ஒழுங்கு நடவடிக்கைகள் மட்டுமே உள்ள ஊழியர்களின் DCRG தொகையை முழுமையாக முடக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு ஏற்பட்ட உண்மையான நிதி இழப்பு அல்லது வசூலிக்கப்படாத பாக்கித் தொகையை மட்டும் கழித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஓய்வூதிய ஒப்புதல் அதிகாரிகளும் இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், ஓய்வுபெறும் மின்வாரிய ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் கிராஜூவிட்டி பணம் உடனடியாகக் கிடைத்து பெரும் ரிலீஃப் கிடைத்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.. என்னென்ன நிபந்தனைகள்?