மின் கொள்முதலுக்கு நீண்டகால ஒப்பந்தம் - தமிழக அரசு முடிவு
2026 தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது.
தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஒருபக்கம், தவெக அரசு மிகவும் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதாக திமுக புகார் சொன்னது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையை போக்க 2027 முதல் 2037 வரை நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் வாங்க தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டிருக்கிறது.
இதன் மூலம், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5 முதல் ரூ.6 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால ஒப்பந்தங்களை விட விலை குறைவாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீண்ட காலம் மின்சாரக் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.