கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வு - விஜய் அறிவிப்பு...
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்து ஜோசப் விஜய் முதலமைச்சரான பின் பல அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பல்கலை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் 9,646 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.5000 உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.
இதன் காரணமாக கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி கௌரவ விருது விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000 ஆகவும், பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக அரசுக்கு வருடத்திற்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.