1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local Holiday Declared for TNEB Offices on November 9, 2026 Following Diwali Festival

மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு...

TNEB
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்  உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் வரும் 09.11.2026  அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக TNPDCL செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அரசாணை உத்தரவில், தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று TNPDCL, TNPGCL, TNGECL, TANTRANSCO மற்றும் TNEB Ltd ஆகிய அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 28.11.2026   அன்று அனைத்து மின்வாரிய அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரத்தில், பொதுமக்கள் மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மின் விநியோக நெட்வொர்க் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் 09.11.2026 அன்று குறைந்தபட்ச ஊழியர்களுடன் தடங்கலின்றி இயங்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மின்வாரிய அலுவலகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு