செவ்வாய், 11 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (17:03 IST)

சரிசமமாக நிற்கும் இரு அணிகள்.. 2வது இடத்திற்கு போட்டி! அதிசயம் நிகழ்த்தப்போவது யார்? – இன்று KKR vs DC மோதல்!

DC vs KKR
ஐபிஎல்லின் லீக் போட்டிகள் முடிவை எட்டி வரும் நிலையில் இன்றைய ப்ளேபேக் வீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வென்றுள்ள கொல்கத்தா அணி புள்ளி வரையில் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று அதுவும் 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி வென்றால் இரண்டாவது இடத்தை பிடிக்கும். கொல்கத்தா வென்றால் இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும்.

கொல்கத்தாவை பொறுத்தவரை கடந்த 5 போட்டிகளில் ஒன்றில் வென்றால் மற்றொன்றில் தோல்வி என்ற கணக்கிலேயே விளையாடி வருகிறது. கடைசியாக பஞ்சாப் அணியிடம் கொல்கத்தா தோல்வியடைந்திருந்ததால் இந்த போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே கண்டு பாயிண்ட்ஸ் டேபிளின் பாதாளத்தில் கிடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் கடந்த 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று சரசரவென பாயிண்ட்ஸ் டேபிளில் மேலே ஏறத் தொடங்கியுள்ளது.

இதற்கு முன்னால் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதலின் போதுதான் கொல்கத்தா அணி 272 ரன்களை குவித்து அதிகபட்ச ரன்கள் சாதனையை படைத்தது. அன்றைய வெற்றிக்கு இன்றைக்கு டெல்லி பதிலடி தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edit by Prasanth.K