திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று மந்தனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய ஊகங்கள் நிலவின. இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறேன். இத்துடன் இந்த விவகாரத்தை முடித்து கொள்ள விரும்புகிறேன். இரு குடும்பங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
திருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரம் மற்றும் அதன் பிறகு பலாஷ் முச்சலுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த திருமணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த உறவு நிரந்தரமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில், மந்தனா தனது முழு கவனத்தையும் நாட்டிற்காக விளையாடி கோப்பைகளை வெல்வதில் செலுத்துவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Siva