1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:01 IST)

இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று -ருதுராஜ் பேட்டி

இந்தியாவில் ஐபிஎல் -2024 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்றைய லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
 
இதில், டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் பந்துவீசியது. எனவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
 
138 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
 
போட்டியின் இறுதியில்,அதாவது, 17.3வது ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களத்தில் இருந்த தோனி ஒரு ரன் மட்டும் எடுத்து, வின்னிங் ஷாட்டை ருத்ராஜ் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போது ருத்ராஜ் ஒரு பவுண்டரி அடித்து CSK-வை வெற்றி பெற செய்தார் . சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர்  வெற்றி பெற்றது.  
 
இந்த வெற்றியை சென்னை கிங்ஸ் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில்,  இப்போட்டியில் வெற்றி குறித்து ருதுராஜ் கெய்குவாட் பேட்டியளித்துள்ளார்.
 
அதில்,’’ நான் ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தை அடிக்கும்போது என்னுடன் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருவரும் போட்டியை முடித்தும் கொடுத்தோம். அதன் பிறகு தற்போது கேப்டனாக நான் முதல் அரைசதத்தை அடிக்கும்போதும் தோனி என்னுடன் இருந்துள்ளார். இப்போதும் நாங்கள் இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.