வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:07 IST)

தொடர்ந்து ஒரே தவறை செய்யும் ரிஷப் பண்ட்… இன்னும் ஒருமுறை செய்தால் தடையா?

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 272 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் டெல்லி அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் காலதாமதம் ஆக்கியது. இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் 24 லட்ச ரூபாய் அபராதமாக விதித்துள்ளது. மேலும அணி வீரர்களுக்கு 6 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை அணிக்கெதிரான போட்டியின் போது தாமதமாக பந்துவீசியதால் பண்ட்டுக்கு 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அதே தவறை செய்த பண்ட், இன்னும் ஒரு போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்துவீசினால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடுவதில் தடை விதிக்கப்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.